ADDED : மே 09, 2026 05:05 AM
சென்னை: த.வெ.க.,வுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்ததாக நேற்று மாலை தகவல் வெளியானது. ஆனால், சிறிது நேரத்திலேயே இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் அறிக்கை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டு உள்ளளதாவது:
சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்று, பாபநாசம், வாணியம்பாடி தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தமிழகத்தில், ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்பட, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கவர்னருக்கு விடுத்துள்ள வேண்டுகோளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், முழு மனதோடு வரவேற்கிறது.
சட்டசபையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இரண்டு உறுப்பினர்களும், கவர்னர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் த.வெ.க., குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மேலும் த.வெ.க.,வை ஆதரிப்பதாக, கவர்னருக்கு கடி தமும் கொடுக்கவில்லை. த.வெ.க., நிர்வாகிகள், காதர் முகைதீனை இரு முறை சந்தித்தும், ஆதரவு குறித்து தெளிவு ஏற்படவில்லை.
