'ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் தீக்குளித்தவருக்கு என்ன பிரச்னை?'
'ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் தீக்குளித்தவருக்கு என்ன பிரச்னை?'
ADDED : ஜன 21, 2025 09:21 PM
சென்னை,:''மதுரை அரிட்டாபட்டி மக்களுக்கு, இன்று நல்ல செய்தி வரும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
மதுரை அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் டில்லி சென்றுள்ளனர். அவர்கள் அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேச உள்ளனர். நிச்சயம் அவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வரும் என நம்புகிறோம். இந்த விவகாரத்தில் பிரச்னை என தெரிந்த பிறகு, மத்திய அரசு ஒவ்வொரு நிமிடமும், இதற்கு தீர்வு காண முயற்சி செய்து வருகிறது.
அரிட்டாபட்டியில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தை அகற்றி, திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என் மக்கள் கேட்டிருந்தனர். அதற்கு உறுதி அளித்துள்ளோம். இந்த திட்டத்தை முழுதும் கைவிடுவதற்கான முயற்சியை, தமிழக பா.ஜ., மேற்கொள்ளும்.
ஆர்.கே. நகர் போலீஸ் நிலையத்தில், ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் துரதிருஷ்டவசமானது. எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல் இருந்தனரா, அதை கடந்து வேறு ஏதேனும் உள்ளதா, அவமானப்படுத்தப்பட்டாரா என்பதை முழுமையாக கண்டுபிடிக்க வேண்டும். எதையும் மறைக்க முயலக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.