அ.தி.மு.க., என்னும் மேகம் வந்ததும் சூரியன் மறையும்
அ.தி.மு.க., என்னும் மேகம் வந்ததும் சூரியன் மறையும்
ADDED : அக் 06, 2024 07:49 PM

அ.தி.மு.க., தொண்டனை நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தமிழகத்தில் நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்தேர் உள்பட பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர். இப்பவும் ஆரம்பிக்கின்றனர். ஆனால், அ.தி.மு.க., மட்டுமே ஆட்சியைப் பிடித்தது.
அ.தி.மு.க., கப்பல் போன்றது. சூறாவளி வந்ததும் லேசா நடுக்கம் இருக்கும். பயந்து கடலில் குதித்தால், கரை சேர முடியாது. 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்.
மழை வரும் வரை சூரியன் பிரகாசமாக இருக்கும். அ.தி.மு.க., என்னும் மேகம் வந்ததும் சூரியன் மறையும். ஆந்திரா, தெலுங்கானா போன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். கட்சி வேஷ்டியை சலவை செய்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு பழனிசாமியிடம் 2000 ரூபாய் வாங்கி கொடுத்து விடுவோம். தி.மு.க., ஆட்சியில் காணாமல் போன திட்டங்கள் அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் திரும்ப வந்துவிடும்.
விஜயபாஸ்கர்,
முன்னாள் அமைச்சர்

