ADDED : நவ 14, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநிலம் சார்ந்த எந்த ஒரு பொறுப்பையும் கையில் எடுக்கக்கூடாது என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். 356 சட்டப் பிரிவை தொடக்கூடாது என நினைக்கிறார். தமிழகத்தில் வேளாண் துறை அதிகாரிகள் தான், டாஸ்மாக் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
விவசாயிகளுக்கு திட்டங்களை எடுத்துச் சொல்லவும் ஆலோசனை வழங்கவும், மேம்படுத்தவும் யாரும் இல்லை. மழை வரும்போது, வெள்ளத்தில் நின்று போட்டோ எடுத்து, விளம்பரம் செய்து கொள்வது மட்டுமே நடக்கிறது. பா.ஜ.,விற்காக ஏதாவது ஒரு பணியை செய்து கொண்டே இருக்கிறேன். யாரிடமும் கை நீட்டாமல் அரசியல் செய்ய வேண்டும். சொந்த பணத்தில் செலவு செய்து, அரசியல் பணி செய்து வருகிறேன். என்னை பற்றி யாரும் விமர்சித்தால், அதற்கு எதிர்வினை ஆற்றுவதில்லை. உண்மை வெளிப்படும்போது, பொய்மை தானாக மறைந்து போகும். -- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

