sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? இட ஒதுக்கீடு விவகாரத்தில் கேட்கிறார் ராமதாஸ்

/

நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? இட ஒதுக்கீடு விவகாரத்தில் கேட்கிறார் ராமதாஸ்

நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? இட ஒதுக்கீடு விவகாரத்தில் கேட்கிறார் ராமதாஸ்

நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? இட ஒதுக்கீடு விவகாரத்தில் கேட்கிறார் ராமதாஸ்

9


UPDATED : மார் 18, 2025 03:46 PM

ADDED : மார் 18, 2025 02:41 PM

Google News

UPDATED : மார் 18, 2025 03:46 PM ADDED : மார் 18, 2025 02:41 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதில் நடவடிக்கை எடுக்காமல், தூங்குவது போல் நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது?' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 29 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 15% ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்தி அம்மாநில சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

வாக்குறுதி

சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தெலுங்கானாவில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், ஜாதி கணக்கெடுப்பை நடத்திய அம்மாநில காங்கிரஸ் அரசு, அதனடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது. அடுத்தக் கட்டமாக பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கவும் தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்திலும் ஓர் அரசு இருக்கிறது. சமூகநீதியைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்து வந்ததாக அடிக்கடிக் கூறிக் கொள்ளும்; அதற்கான விளம்பரங்களை வெளியிடும். ஆனால், சமூகநீதிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட அந்த அரசு கிள்ளிப்போடாது. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினால் அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கைகளை விரிக்கும். தமிழக ஆட்சியாளர்களுக்குத் தெரிந்த சமூகநீதி இது தான்.

சமூகநீதி

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் அறிவார்கள். ஆனாலும், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம்.அவர்கள் தூங்கவில்லை, தூங்குவதைப் போல நடிக்கிறார்கள். சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. இதை தமிழக அரசு உணர வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us