ADDED : டிச 10, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்ல, நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தார் நடிகர் ரஜினி. அவரது ரசிகர்கள், அவருக்கு, 'அட்வான்ஸ்' பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது செய்தியாளர்கள் சிலர், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''எப்போ...'' என்று கேட்டார்; பின்னர், ''ஓ மை காட், சாரி,'' என்று கூறியபடியே அங்கிருந்து சென்றார்.

