ரூ.78,000 கோடி எங்கே சென்றது? வெள்ளை அறிக்கை கேட்கும் அண்ணாமலை
ரூ.78,000 கோடி எங்கே சென்றது? வெள்ளை அறிக்கை கேட்கும் அண்ணாமலை
ADDED : அக் 24, 2025 02:02 AM

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
ஈரோடு மாவட்டம், பர் கூர் மலையில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தமிழக, கர்நாடகா எல்லையான அங்கு, குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி மலை கிராமங்களுக்கு, நேரடியாக செல்ல பாதை இல்லை.
வனப்பகுதிக்கு மத்தியில், கர்கேண்டி நீரோடை பள்ளம் வழியாக, 20 கி.மீ., பயணித்தே கிராமங் களுக்கு செல்ல முடியும்.
கனமழை காரணமாக, கர்கேண்டி நீரோடை பள்ளத்தில், காட்டாறு ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்கள் முடங்கி கிடக்கின்றனர். உயர்மட்ட பாலம் அமைக்குமாறு, பல ஆண்டுகளாக, மக்கள் கோரிக்கை வைத்தும், தி.மு.க., அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட, 78,000 கோடி ரூபாய் செலவிட்டதாக, பட்ஜெட் அறிக்கையில் கூறுகிறது. ஆனால், பல கிராமங்களில், இன்னும் சாலை வசதிகள் இல்லை. மத்திய அரசு வழங்கும் கிராம சாலைகள் திட்ட நிதியும் எங்கு செல்கிறது என தெரியவில்லை.
கடந்த நான்கரை ஆண்டு களாக, மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடித்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், மக்களின் அடிப்படை தேவையான சாலை வசதிகளை கூட, ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்பது வெட்கக்கேடு.
சாலைகள் அமைத்ததாக , கணக்கு காட்டிய 78,000 கோடி ரூபாய் எங்கு சென்றது என்பதற்கு, ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

