ADDED : ஆக 04, 2026 08:06 PM

சென்னை: தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை உள் ஒட்டிய பகுதிகளிலும், இலங்கையின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.
இதனால், 11 மாவட்டங்களில் கனமழையும், 13 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று (ஆக.,4ம் தேதி) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு வெளியாகி உள்ளது.
இதன்படி மழைப்பொழிவு செமீட்டரில்
ஈரோடு அரச்சலுார்- 4.5
நாமக்கல் வடகரை ஆத்துார்- 4.1
சிவகங்கை சாத்தரசன்கோட்டை- 3.6
ஈரோடு புங்கம்பாடி -3.4
ஈரோடு அவல்பூந்துறை- 3.1
திருப்பூர் சேவூர்- 2.8
சிவகங்கை மானாமதுரை- 2.7
ராமநாதபுரம் பார்த்திபனுார் -2.6
கோவை லோயர் நீராறு- 2.5
ஈரோடு ஒலகடம்- 2.4
செங்கல்பட்டு செம்பாக்கம்- 2.3
கரூர் மண்மங்கலம்- 2.1
செங்கல்பட்டு கடப்பாக்கம்- 2.0
திருச்சி முடிகண்டம் -2.0
திருவள்ளூர் கருவலுார்- 2.0
நாமக்கல் கொல்லிமலை -1.6
பச்சைமலை- 1.6
கோவை வடவள்ளி- 1.5
வேலூர் காட்பாடி -1.4
நாமக்கல் குமாரபாளையம்- 1.4
தேனி போடிநாயக்கனுார்- 1.3
மாமல்லபுரம்- 1.2 செமீ மழை பதிவாகி உள்ளது.
