தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ கிசு கிசு: என்ன பரிகாரம்?

 கிசு கிசு: என்ன பரிகாரம்?

 கிசு கிசு: என்ன பரிகாரம்?


ADDED : மார் 26, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்ன பரிகாரம்?


1. 'மயிலாப்பூர் தொகுதியில் இருந்து ஏன் பிரசாரத்தை தொடங்குகிறீர்கள். இப்படி பிரசாரம் தொடங்கிய தலைவர்களெல்லாம் கட்சியும் தோற்று, தானும் தோற்றதாகத்தான் பழைய வரலாறுகள் சொல்கின்றன என, பழைய சென் டி மென் டுகளை காட்டி, இலை கட்சித் தலைவரிடம் கட்சியின் முன்னோடிகள் சிலர் சொல்ல, அதிர்ந்து போய் விட்டாராம் தலைவர். 'இதற்கு என்ன பரிகாரம்?' என அவர் கேட்க, ஜோதிடர்களை தேடி ஓடியிருக்கின்றனராம் கட்சியினர்.



புதியவர் ஆகாது!


2. கிருஷ்ணகிரியில் ஒரு தொகுதி பெற்றிருக்கும் தாமரை கட்சியினர், அந்த தொகுதியில் ரெட்டி ஒருவருக்கு ஒதுக்க முடிவெடுத்திருக்க, அங்கே இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களுக்கு பிடிக்கவில்லையாம். 'கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்க, தொகுதிக்கு புதியவரான ஒருவருவருக்காக, கூட்டணி கட்சி தலைமையிடம் பேசி தொகுதி வாங்கியிருப்பது ஏன்?' என்று கேட்டு கொந்தளிக்கின்றனராம்.



ஐந்தும் கன்னிவெடி!


3. சைக்கிள் கட்சிக்கு, கூட்டணி தலைமை ஒதுக்கிய தொகுதிகளெல்லாம் அமைச்சர்களையும், வி.ஐ.பி.,க்களையும் எதிர்க்க வைப்பதாக ஆகி இருக்கிறது. 'ஐந்து கொடுத்து விட்டு, அத்தனையும் காலியாகும் தொகுதிகளை கொடுத்தால் எப்படி. அதற்கு பேசாமல் கட்சியை தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருப்பேனே?'என புலம்புகிறாராம் வாசமான அந்த முன்னாள் சைக்கிள் தலைவர். 'தேர்தலுக்கு பின், தாமரையிலேயே ஐக்கியமாகிடுங்க' என சொல்லி தலைவரை சமாதானப்படுத்துகின்றனராம்.



கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்ததலில் இலைக் கட்சி தலைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாம். அதை கொண்டாடும்விதமாக, சொந்த ஊரில் உள்ள கோவிலுக்கு தன்னுடைய குடும்பத்தினரை, பேசி முடித்த மறுநாள் அனுப்பி வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய வைத்தாராம். அப்போது, அங்கு ஒருவருக்கு சாமி வந்து, அருள் வாக்கு சொல்ல, அதுவும் தனக்கு பாசிட்டிவ்வாக இருப்பதால், தலைவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.



சுமுகமாக கூட்டணி கட்சிகளோடு பேசி முடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பீயூஸான மனிதர், கடைசியாக கட்சி அலுவலகம் வந்தபோது, அடிக்கடி கட்சி பக்கம் எட்டிப் பார்க்காத தலைகளெல்லாம் அட்டெனென்ஸ் போட காத்திருந்ததாம். ஒவ்வொருவரையும் பார்த்த அந்த மனிதர், என்ன தேர்தல் நேரம் என்பதால், கட்சி பக்கம் எட்டிப் பார்க்கிறீர்களா? என பளிச்சென்று கேட்க, பலருடைய முகங்களும் பியூஸ் போனது போல் ஆகி விட்டதாம்.



கடந்த முறை 'மைக்' எடுத்து பேசி, ஊரெல்லாம் பிரசாரத்தில் ஈடுபட்ட அந்த சிங்கக் குரல் நடிகர் தலைவர், இப்போது விவசாயியோடு விவசாயியாக ஏர் கலைப்பையோடு தேர்தலை நோக்கி கிளம்பி இருக்கிறார். அவருக்கு கட்சி நிதி என்று எதுவும் இல்லாததால், தேர்தலை எப்படி எதிர்கொள்வது என புரியாமல் தட்டு தடுமாறுகிறாராம். பிரசார வேன் துவக்கத்திலேயே மக்கர் செய்ய, நண்பர்கள் யாராவது பிரசார வேன் கொடுத்து உதவ மாட்டார்களா என காத்திருக்கிறாராம்.



கட்சியை கலைக்காத குறையாக, கடந்த தேர்தலின் போதே சூரிய கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்த 'கண்ணே கலைமானே' நடிகர், அதற்கு தேவையானதை ராஜ்யசபா தேர்தலின் போதே பெற்று விட்டார். ஆனாலும், வரும் தேர்தலுக்கும் கட்சி சார்பில் போட்டியிட ஐவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனச் சொல்லி, ஐந்து விரல்களை சூரிய கட்சியை நோக்கி கை நீட்ட, 'நீங்க செஞ்ச உதவிகளுக்கு நிறைய செஞ்சாச்சு; ரெண்டு போதும்' என சொல்லி மூன்று விரல்களை மடக்கி விட்டனராம்.



கடந்த முறை தாமரை கட்சியில் சென்னையின் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பூ நடிகைக்கு, இப்போதும் தேர்தலில் போட்டிபோட ஆசையாம். ஆனால், போட்டி கடுமையாக இருப்பதால், தனக்கு இம்முறையும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என முடிவெடுத்து ஒதுங்கி இருந்தாராம். அவருடைய கணவரோ, அரசியலில் ஒதுங்கக் கூடாது என சொல்லி அம்மணியை முடுக்கிவிட, சென்னையின் பிரதான தொகுதியில் சீட் கேட்டு மல்லுகட்டுகிறாராம்.



அறம்தாங்கியூரில் தொடர்ச்சியாக தானும் தன் மகனும் வென்று கொண்டிருக்கும் தொகுதியை இந்த முறை சூரிய கட்சியினர் எடுத்துக் கொள்ள முயல, கை கட்சியின் அரசர் கடும் கோபம் அடைந்துள்ளாராம். கடந்த லோக்சபா தேர்தலின்போது, மலைக்கோட்டை தொகுதியை தன்னிடம் இருந்து பறித்ததோடு, இப்போது என் மகனையும் தொகுதி இல்லாமல் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனரே என்று சொல்லி, சூரிய கட்சி தலைமையை நோக்கி கொந்தளிக்கிறாராம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us