ADDED : ஏப் 27, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ''வேலுமணி சொன்னதை, நயினார் நாகேந்திரனும், வானதியும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் அவர் கூறியதாவது:
பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பது தொடர்பாக, நேற்று முன்தினம் விவாதம் நடந்த போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமாரும், அ.தி.மு.க., கொறடா வேலுமணியும், 'கூட்டணி வேறு, கொள்கை வேறு. தேர்தலுக்காகவே கூட்டணி' என்றனர்.
அவர்கள் யாரை மனதில் வைத்து, எதை மனதில் வைத்து பேசினர் என்பது எனக்குத் தெரியாது. இது, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி எம்.எல்.ஏ., ஆகியோருக்கு தெரியுமா என்பதும், எனக்குத் தெரியாது. எது எப்படி இருந்தாலும், வேலுமணி சொன்னதை, நயினார் நாகேந்திரனும், வானதியும் மனதில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

