ADDED : பிப் 11, 2024 01:01 AM

கோவை,:தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்பு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. தி.மு.க., துணைப் பொதுச்செயலரான கனிமொழி தலைமையிலான குழுவினரை, கட்சியினர், பொதுமக்கள், விவசாயிகள், தொழில் துறையினர் என, பல்வேறு தரப்பினர் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதன்பின், கனிமொழி அளித்த பேட்டி:
ஜி.எஸ்.டி.,யில் உள்ள பல்வேறு சிக்கல்களால், தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக, சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் கூறியிருக்கின்றனர்.
இதற்கு சரியான தீர்வை, தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவோம். உள் கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர கோரியுள்ளனர்.
முந்தைய லோக்சபா தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட சில விஷயங்களை செய்ய முடியாமல் போனதற்கு, மத்திய அரசு பாரபட்சமாக நடந்து வருகிறது.
ரயில்வே திட்டங்களுக்கு கூட, பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. இதனால், சில திட்டங்கள் செய்யமுடியாமல் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

