ADDED : ஏப் 14, 2025 05:42 AM

'ஏரோட்டும் உழவன் ஏங்கி தவிக்கையிலே, தேரோட்டம் உனக்கு ஒரு கேடா தியாகேசா' என பாடியவர்கள் தான், தி.மு.க.,வினர். பங்குனி உத்திரம் அன்று, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உருவாகி உள்ளது. இதற்காக, பா.ஜ., தலைமையை பாராட்டாதோர் இல்லை.
பள்ளிக்கு சென்று திரும்பும் பிள்ளைகளின் பைகளில், போதைப் பொட்டலங்கள் இருக்குமோ என தேட வேண்டிய நிலைக்கு தி.மு.க., அரசு தள்ளிவிட்டுள்ளது. இதுதான் இன்றைய தி.மு.க., ஆட்சியின் லட்சணம். அ.தி.மு.க., மீது ஏறி, பா.ஜ., சவாரி செய்கிறது என, திருமாவளவன் புது கண்டுபிடிப்பை கூறியுள்ளார். தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமா, யார் மீது ஏறி சவாரி செய்கிறார் என்பதை சொல்ல வேண்டும்.
அமைச்சர் பொறுப்புக்கே லாயக்கில்லாத பொன்முடியின் அருவருப்பு பேச்சுக்கு, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மற்ற கட்சிகள் கருத்து கூறவில்லை. அப்படியென்றால், அக்கட்சிகளுக்கு மானம், ரோஷம் எதுவும் கிடையாது என எடுத்துக் கொள்ளலாமா?
- ராஜா,
மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

