ADDED : ஜூலை 11, 2025 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு தவறிழைத்தவரை, குற்றவாளி என எந்த ஆட்சியாளர் நினைக்கிறாரோ, அவர் தான் சிறந்த ஆட்சியாளர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீசாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கில் போலீசாருக்கு நெருக்கடி தந்த அதிகாரி யார்?
நான், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்கும்போது, பல நெறிமுறைகளை வகுக்கும் போலீசார், அஜித்குமார் விசாரணையில் நீதிமன்ற விதிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை? அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டும், வழக்குப்பதிவும் செய்யவில்லை; விசாரணையும் நடத்த வில்லை.
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி