கோவில் சொத்தை தாரைவார்க்க வஹாப் யார்: ராம ரவிக்குமார்
கோவில் சொத்தை தாரைவார்க்க வஹாப் யார்: ராம ரவிக்குமார்
ADDED : ஜன 25, 2026 05:56 AM

சென்னை: ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராமரவிக்குமார் அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டம், திம்மராஜபுரத்தில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, கல்யாண சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக, ஆக்கிரமிப்பு எண்ணத்தோடு குடியிருக்கும் நபர்களுக்கு ஆதரவாக, பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என, தி.மு.க., - எம்.எல்.ஏ., அப்துல் வஹாப், சட்டசபையில் கோரிக்கை வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
எந்தவொரு கோவிலுக்கும், மூலவர்கள் தான் உரிமையாளர்களே தவிர, அறநிலையத் துறைக்கு சொந்தமான சொத்துக்கள் என, எதுவும் கிடையாது.
தேர்தல் நேரம் என்பதால், தங்களுக்கு ஓட்டு கிடைக்கும் என்ற குறுகிய மனப்பான்மையில் செயல்படுகிறார் அந்த எம்.எல்.ஏ., ஏழை மக்கள் மீது கரிசனப்பட்டு, பட்டா வழங்க வேண்டும் என கூறும் அப்துல் வஹாப், தங்களது சொத்து, தி.மு.க.,வினரின் சொத்து அல்லது வக்பு வாரிய சொத்துகளில், இடம் அளித்து, பட்டா வழங்க வேண்டும்.
கோவில் சொத்தை பிறருக்கு தாரைவார்க்க நினைப்பது தவறான போக்கு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

