ADDED : அக் 27, 2025 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாஸ்மாக் மது பானங்களை பத்திரமாக பாதுகாக்க, பெரிய பெரிய கட்டடம் கட்டி, அதில் குளிரூட்டி, காவலர்களை போட்டு தி.மு.க., அரசு பாதுகாக்கிறது.
ஆனால், உழைக்கும் விவசாயிகள், உயிரை கொடுத்து விளைவிக்கும் உணவுப் பொருளை, தெருவில் கொட்டி மழையில் நனையவிடும் அவலம் உள்ளது. மக்களுக்கு சேவை செய்யாதவர்களின் கையில் அதிகாரம் இருந்தால், மக்கள் நலன் என்பது கனவாகத்தான் இருக்கும்.
மனசாட்சி இருந்தால் நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவரா? இதுதான் சாதனையா? ஒரு நாள் பட்டினி கிடந்து சாகும்போது, அதன் அருமை தெரியும்.
மக்களின் உயிரை பறிக்கும் சாராயத்தை பாதுகாக்கும் அரசு, உயிரை பாதுகாக்கும் உணவான நெல்லை பாதுகாக்கவில்லை. தமிழகத்தை தி.மு.க.,விடம் இருந்து காப்பாற்றினாலே போதும்.
-- சீமான்
தலைமை
ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர்

