ADDED : ஆக 16, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதால், அதற்கு அபராதமாக இந்தியாவுக்கு வரியை உயர்த்தியிருப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். அதை எதிர்த்து, பிரதமர் மோடி ஏன் கேள்வி கேட்கவில்லை.
ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்த பா.ஜ., சுதந்திரத்துக்கு முன்பிருந்த மனநிலையோடு ஆட்சி செய்கிறது. பல மொழி, பன்முகத்தன்மை கொண்ட பல மாநிலங்களின் தொகுப்பு தான் இந்தியா. ஆனால் ஒரே நாடு; ஒரே மொழி எனக்கூறும் பா.ஜ.,தான், ஒருசில மதத்தவரை, நாட்டின் எதிரி என கூறுகிறது. ஹிந்துத்துவா கொள்கையை ஏற்காத ஹிந்துக்கள் மீது, பா.ஜ., குறிவைத்துள்ளது. தற்போது கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் அரசு முதலீடு குறைந்து, தனியார் முதலீடு அதிகரித்திருக்கிறது. இது ஆபத்தானது.
- அமர்ஜித் கவுர், மூத்த நிர்வாகி, இ.கம்யூ.,

