ADDED : நவ 14, 2024 12:19 AM
சென்னை: தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மூலிகை செடிகள், பூக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி நடக்கிறது.
தற்போது, பல மாவட்டங்களில், தக்காளி, சிறிய வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட பலவகை காய்கறிகள்; புடலை, அவரை, பாகற்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகள் சாகுபடியும் கணிசமாக குறைந்துள்ளது.
இதனால், சந்தையில் காய்கறிகள், அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
சாகுபடி குறைந்துள்ள மாவட்டங்களில், அதற்கான காரணத்தை கண்டறிய, தோட்டக்கலைத் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவினர், பல பிரிவுகளாக பிரிந்து சென்று, சாகுபடி குறைந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

