sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தரமற்ற உரம், பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தாமதம் ஏன்?

/

தரமற்ற உரம், பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தாமதம் ஏன்?

தரமற்ற உரம், பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தாமதம் ஏன்?

தரமற்ற உரம், பூச்சிக்கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தாமதம் ஏன்?


ADDED : ஜூலை 10, 2024 03:21 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 03:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தரமற்ற உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வேளாண் துறையினர் காலம் தாழ்த்தி வருவது, விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூச்சி தாக்குதல் தடுப்பு, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவில் தான், ரசாயனம் கலக்கப்பட வேண்டும்.

ஆனால், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் சில நிறுவனங்கள், அதிகப்படியான ரசாயனத்தை வியாபார நோக்கத்திற்கான பயன்படுத்துகின்றன. இதன் தாக்கம், உற்பத்தியாகும் உணவுப் பொருட்களின் மீது படிவதால், அவற்றை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, தரமான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வேளாண் துறை வாயிலாக, 14 உர கட்டுப்பாட்டு ஆய்வகங்கள், 12 பூச்சிக்கொல்லி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆய்வகங்களில், 2023 - 24ம் ஆண்டு, 25,962 உரங்களின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 670 உரங்கள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டு உள்ளன. இதேபோல, 1,506 உயிர் உரங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 87 உரங்களும்; 22,474 பூச்சிக்கொல்லி மருந்துகளை பரிசோதனை செய்ததில், 166 மருந்துகளும் தரமற்றவை என, தெரியவந்துள்ளது.

இவற்றை, 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தயாரித்துள்ளன. அந்த நிறுவனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், வேளாண் துறையினர், அந்த நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.

அதனால், வழக்கம் போல, அந்த உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள், தங்கு தடையின்றி விற்பனையாகி வருகின்றன. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

பாரபட்சம் கூடாது!

தரமற்ற உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டால் மகசூல் குறைவதுடன், மண் வளமும் பாதிக்கப்படும். இதனால், விவசாயிகளின் கடும் உழைப்பு வீணாகும். எனவே, இதுபோன்ற தரமற்ற உரம் தயாரித்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம். இதில், பாரபட்சம், அலட்சியம் கூடாது.

- ஆர்.விருத்தகிரி, தேசிய செயற்குழு உறுப்பினர், இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு.






      Dinamalar
      Follow us