sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 இறுதியாண்டு மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கியது ஏன்? அமைச்சர்கள் விளக்கம்

/

 இறுதியாண்டு மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கியது ஏன்? அமைச்சர்கள் விளக்கம்

 இறுதியாண்டு மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கியது ஏன்? அமைச்சர்கள் விளக்கம்

 இறுதியாண்டு மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கியது ஏன்? அமைச்சர்கள் விளக்கம்


ADDED : ஜன 24, 2026 06:15 AM

Google News

ADDED : ஜன 24, 2026 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: “தொடர்ந்து மேல் படிப்பு படிக்கவும், வேலை வாய்ப்புக்கு பயன்படுத்தவும் தான், கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்பட்டது,” என, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார்: அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட, கல்லுாரி மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, தி.மு.க., அரசு நிறுத்தியது. இப்போது தேர்தல் வருவதால், கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், 'லேப்டாப்' வழங்கியுள்ளது. படிப்பை முடித்து வெளியே செல்வோருக்கு, 'லேப்டாப்' வழங்கி என்ன பயன்?

அமைச்சர் கோவி செழியன்: முதல் கட்டமாக, கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற மாணவர்களுக்கும் வழங்கப்படும். மேல் படிப்பு படிக்கவும், வேலை வாய்ப்பு பெறவும், 'லேப்டாப்' பயன்படும்.

அமைச்சர் வேலு: கல்லுாரியில் படித்துக் கொண்டிருப்போருக்கு, அவர்களின் கல்லுாரியிலேயே கம்ப்யூட்டர் ஆய்வகம் உள்ளது. அதை பயன்படுத்தி கற்றுக் கொள்வர். படிப்பை முடித்து செல்லும்போது, எல்லாராலும் 'லேப்டாப்' வாங்க முடியாது. அந்த ஏக்கத்தை போக்கவே, இறுதியாண்டு மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கியுள்ளோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us