UPDATED : பிப் 13, 2025 02:13 PM
ADDED : பிப் 13, 2025 01:44 PM

தென்காசி: தென்காசி அருகே காட்டுப் பகுதியில் மனைவியை எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் சிவகாசியை சேர்ந்த ஜான் கில்பர்ட் மற்றும் அவரது தம்பி கைது செய்யப்பட்டனர்.
தென்காசி அருகே காட்டுப் பகுதியில் பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் சிவகாசியை சேர்ந்த ஜான் கில்பர்ட் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கமலி, இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்தவர் ஆத்திரத்தில் கொலை கணவன் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
கணவனே மனைவியை கொன்று சடலத்துடன் 2 நாட்கள் காரில் வலம் வந்தது. கோபத்தில் இரும்பு கம்பியால் தாக்கியதால் மனைவி கமலி மரணம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது. சி.சி.டி.வி.,யில் பதிவான வாகன எண்ணை வைத்து ஜான் கில்பர்ட்டை போலீசார் கைது செய்தனர். மனைவியை கொலை செய்ததை ஜான் கில்பர்ட் ஒப்புக் கொண்டார்.
உடந்தையாக இருந்த ஜான்கில்பர்ட் தம்பி தங்க திருப்பதியும் கைது செய்யப்பட்டார்.