ADDED : டிச 26, 2025 02:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: அசாம் மாநிலம், நாகூன் மாவட்டம், காந்தாரா காம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிதான்ஹசாரிகா, 33. கோவை, கணபதி, சின்னச்சாமி நகரில் மனைவி ஜிண்டி, 36, உடன் வசித்து வருகிறார்.
அத்திப்பாளையம் பிரிவிலுள்ள அபார்ட்மென்டில் பிளம்பராக உள்ளார். பிதான்ஹசாரிகாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ஜிண்டி சந்தேகப்பட்டுள்ளார். இதனால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம், பிதான்ஹசாரிகா வீட்டுக்கு வந்தபோது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ஜிண்டி ஆத்திரமடைந்து, கணவரின் ஆண் உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டு, கதவை பூட்டி சென்றார்.
பிதான்ஹசாரிகா கூச்சலிட்டதால், பக்கத்து வீட்டினர் சென்று, அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணம்பட்டி போலீசார், ஜிண்டியை கைது செய்தனர்.

