ADDED : ஆக 29, 2025 04:04 AM
மத அடிப்படையில், இந்தியா மீது படையெடுக்க துாண்டும் வகையில் பேசிய உஸ்தாத் பீர் முகமது சதக்கி என்பவர் மீது, தி.மு.க., அரசின் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவரது பேச்சால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களால், இந்தியாவுக்கும், குறிப்பாக, தமிழகத்திற்கும் ஆபத்து நேரலாம் என, எச்சரித்த, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் பால கவுதமன் மீது, வழக்குப்பதிவு செய்தது நியாயமற்றது.
தேச பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல், எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மத அடிப்படையில், பயங்கரவாதத்தை விதைக்கும் உஸ்தாத் பீர் முகமது சதக்கி மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத பேச்சை சுட்டிக்காட்டி, தேச நலனுக்காக குரல் கொடுத்த, பால கவுதமன் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்.
- -பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,