உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 12, 2026 01:48 AM

அ நிறம் | அளவு
கோவை மாவட்டம், சிங்காநல்லுார் அருகே உள்ள ஒண்டிப்புதுார், சுங்கம் பகுதியில், பொது வெளியில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதை அ.தி.மு.க., வட்டச் செயலர் சுரேஷ்குமார் கண்டித்துள்ளார். அதை தொடர்ந்து, கடந்த 9ம் தேதி இரவு அ.தி.மு.க., அலுவலகத்தில், ஐந்து நபர்கள் கொண்ட கும்பல், அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், வட்டச் செயலர் சுரேஷ்குமார், கோவை மாநகர் மாவட்ட பாசறை இணை செயலர் செந்தில் மற்றும் பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,
