ADDED : மார் 04, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : திரைப்பட நடிகை ரஞ்சனா நாச்சியார், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் குடும்பத்தினரில் ஒருவர். இவர், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் தனக்கு தான் சீட் கிடைக்கும் என தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, மக்களுடன் மக்களாக சென்று கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
குறிப்பாக மீனவ கிராமங்களில், மோடி அரசு மீனவர்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து விளக்கி, ஓட்டு கேட்டு வருகிறார். சீட்டு வாங்குவதற்கு முன்பே ஓட்டு கேட்டு செல்லும் ரஞ்சனா நாச்சியார், அதிரடியான விஷயங்களை செய்யக்கூடியவர். சென்னையில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை தெறிக்க விட்டவர். அதே போல, இங்கும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை தெறிக்க, தெறிக்க ஓட விடுவார் என பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.

