தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கடையநல்லுார் பெருமாள் கோவில் திருப்பணிக்கு கூடுதல் நிதி கிடைக்குமா?

கடையநல்லுார் பெருமாள் கோவில் திருப்பணிக்கு கூடுதல் நிதி கிடைக்குமா?

கடையநல்லுார் பெருமாள் கோவில் திருப்பணிக்கு கூடுதல் நிதி கிடைக்குமா?


ADDED : மார் 03, 2024 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 02:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடையநல்லுார் கரிய மாணிக்க பெருமாள் கோவிலில் திருப்பணி, சம்ப்ரோக்ஷண செலவு, 50 லட்சம் ரூபாயை கடந்துள்ள நிலையில், அறநிலையத்துறை கணிசமான நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுாரில், நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. தொல்லியல் துறை ஆய்வின்படி, 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில், பெருமாள் திருப்பதியை போல நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருப்பதியில் வேண்டுதலை நிறைவேற்ற முடியாத வர்கள், இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். இக்கோவிலின் சம்ப்ரோக்ஷணம் கடைசி யாக, 2007ம் ஆண்டு நடந்தது.

கடந்த ஆண்டு சம்ப்ரோக்ஷணம் நடத்த முடிவு செய்து, திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கு கோவில் டிரஸ்டி சார்பில், 49 லட்சம் ரூபாய் திட்டமிடப்பட்டது.

கோவில் உபயதாரர்கள் தரப்பில் கூறியதாவது:

கோவில் திருப்பணிக்கு, 18 லட்சம் ரூபாய் அறநிலையத்துறை அனுமதி அளித்தது. ஆனால், திருப்பணி செலவுகள், 31 லட்சம் ரூபாயை கடந்து விட்டன.

மேலும், சம்ப்ரோக்ஷணத்திற்கான பட்டாச்சாரியார் சம்பாவனை, யாகசாலை செலவுகள், கோபுர புனரமைப்பு செலவு, 24 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, சம்ப்ரோக்ஷணம் அன்று அன்னதானம் செய்ய வேண்டியுள்ளது; அதற்கு தனி செலவு உள்ளது. எனவே, அறநிலையத்துறை கமிஷனர் தனி கவனம் செலுத்தி கணிசமான நிதி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர் --

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us