பிரதமர் மோடி பொதுக்கூட்ட த்தில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பா
பிரதமர் மோடி பொதுக்கூட்ட த்தில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பா
ADDED : பிப் 08, 2024 02:38 AM
திருப்பூர்:பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பா.ஜ. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கூட்டணிக்கட்சி தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.
தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுவரும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பா.ஜ. லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வரும் 25ம் தேதி நடக்கிறது; பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதற்காக 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகளை திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.வினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுக்கூட்ட முந்தைய நாளில் திருப்பூர் வடக்கு தெற்கு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்கிறார். இதற்கான வழித்தடங்கள் பகுதிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில நிர்வாகிகள் கலந்தாலோசித்து வருகின்றனர்.
பா.ஜ. மாநில பொதுச்செயலரும் நிகழ்ச்சி பொறுப்பாளருமான முருகானந்தம் கூறியதாவது: பா.ஜ. தேசிய தலைவர் நட்டா தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசுவதற்காக வரும் 11ம் தேதி சென்னை வருகிறார். வரும் 25ம் தேதிக்கு முன்னதாகவே கூட்டணி குறித்து தெரியவரும். பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கூட்டணிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது.
பொதுக்கூட்ட மேடையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இரு பெரிய நிகழ்ச்சிகளுக்காக மண்டலம் வாரியாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் ஒதுக்கப்பட்டு விறுவிறுப்பாக நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

