sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரு பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தில் மாற்றம் நிகழுமா?

/

இரு பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தில் மாற்றம் நிகழுமா?

இரு பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தில் மாற்றம் நிகழுமா?

இரு பெரும் சக்திகள் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தில் மாற்றம் நிகழுமா?

30


UPDATED : நவ 07, 2025 01:10 AM

ADDED : நவ 07, 2025 01:06 AM

Google News

30

UPDATED : நவ 07, 2025 01:10 AM ADDED : நவ 07, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், அக்கூட்டணிக்கு எதிரான சிந்தனையில் இருக்கும் இரு பெரும் கட்சிகள் ஒன்று சேர்ந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

'அதற்கு நெருடலாக இருக்கும் சில விஷயங்களை சரி செய்தால், அது சாத்தியமாகும்' என, பா.ஜ., டில்லி தலைமைக்கு, உளவுத்துறை அதிகாரிகள் வாயிலாக தகவல் போயுள்ளது. அதனால், பா.ஜ., சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டு, தமிழக அரசியல் களத்தில் திருப்பங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, மத்திய உளவுத்துறை மற்றும் பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:


தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் தி.மு.க.,வை, வரும் தேர்தலில் எப்படியாவது வீழ்த்த வேண்டும் என, பா.ஜ., தலைமை உறுதியாக இருக்கிறது. அதனால் தான், லோக்சபா தேர்தலில் வெளியேறிய அ.தி.மு.க.,வை மறுபடியும் பா.ஜ., கூட்டணிக்குள் கொண்டு வந்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பழனிசாமி பரிந்துரை


அதன்பின், கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருக்கப் போவது யார் என்பதில் துவங்கிய முரண், இரு தரப்பிலும் இன்று வரை தொடர்கிறது. எனினும், இந்த கூட்டணி அமைவதில் எதிர்ப்பாக இருந்த அண்ணாமலையை, தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி, புதிய தலைவராக, பழனிசாமி பரிந்துரைத்த நாகேந்திரனை நியமித்தது, மத்திய பா.ஜ., தலைமை.

அதன் பிறகும், இரு கட்சிகள் இடையே இன்னமும் இணக்கமான போக்கு இல்லை. இந்நிலையில், திடீர் அரசியல் வரவான நடிகர் விஜயின் த.வெ.க.,வுக்கு, தமிழகத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாக, பல மட்டங்களில் இருந்து பா.ஜ., தலைமைக்கு தகவல் போய் கொண்டே இருக்கிறது.

விஜய் சென்ற இடங்களில் எல்லாம் அபரிமிதமான மக்கள் கூடுவதோடு, அதெல்லாம் ஓட்டுகளாக மாறும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், பல கட்சி தலைவர்களும் விஜயை உற்று நோக்குகின்றனர்.

இந்நிலையில், 'யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேருவேன்; ஆனால், அரசியல் எதிரியான தி.மு.க.,; கொள்கை எதிரியான பா.ஜ.,வோடு மட்டும் நேரடியாகவோ, மறைமுகமாகவே கூட்டணி சேர வாய்ப்பில்லை' என, விஜய் அதிரடியாக அறிவித்தார்.

அக்கருத்தில் அவர் உறுதியாக இருப்பதால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க., இணைய முடியாத சூழல் உள்ளது. சமீபத்தில் கூட, த.வெ.க, இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் இதை உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பா.ஜ., தரப்பில், பல்வேறு கட்டங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்தி, மக்கள் கருத்து அறியப்பட்டு இருக்கிறது.

கூடவே, மத்திய உளவுத்துறை அதிகாரிகளும், தமிழகம் முழுதும் மக்கள் மனநிலையை அறிய ரகசிய சர்வே நடத்தி, தங்கள் அறிக்கையை, டில்லியில் ஆட்சி மேலிடத்தில் இருப்போருக்கு அளித்துள்ளனர்.

தி.மு.க., கூட்டணி வலுவாக இருப்பதால், ஏற்கனவே பெற்ற ஓட்டுகளில் பெரிய அளவில் சிதைவுகள் இருக்க வாய்ப்பில்லை.

மேலும், தி.மு.க.,வுக்கு எதிரான சக்திகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, த.வெ.க., கூட்டணி என தனித்தனியாக பிரிவதும், தி.மு.க., கூட்டணிக்கே சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

எதிரான சக்திகள்

அதனால், தி.மு.க., வுக்கு எதிரான சக்திகள் ஒன்றுசேர வேண்டிய கட்டாயம் உள்ளது. முக்கியமாக, தி.மு.க.,வுக்கு எதிரான வலுவான இரு சக்திகளான அ.தி.மு.க.,வும், த.வெ.க.,வும் ஒன்று சேர வேண்டும். அதற்கு, பா.ஜ., நெருடலாக இருக்கிறது.

அதனால், தி.மு.க.,வை வீழ்த்தும் விஷயத்தில் பா.ஜ., உறுதியாக இருந்தால், அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி அமைய, பா.ஜ.,வே ஒத்துழைக்க வேண்டும் என, சர்வே முடிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, பா.ஜ., தலைமையில், தமிழக கூட்டணி தொடர்பான சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. பா.ஜ.,வைப் பொறுத்தவரை, தேசிய கட்சி என்பதால், 2029 லோக்சபா தேர்தல் தான் பிரதான நோக்கம்.

ஆலோசனை

அதனால், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த, எந்த எல்லைக்கும் சென்று, யாருடனும் சமாதானமாக போகலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

ஒருவேளை, அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி அமையும்பட்சத்தில், பா.ஜ., தனித்து விடப்பட்டால், மோசமான தோல்வி கிடைக்கும் என்பதால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனையும் பா.ஜ., தரப்புக்கு உள்ளது.

எனவே, கடந்த லோக்சபா தேர்தலைப் போல, சிறு கட்சிகளுடன் இணைந்து, பா.ஜ., தலைமையில் ஒரு அணி அமைத்து, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளலாம் என, பா.ஜ., தலைமைக்கு சிலரால் ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இவை, பா.ஜ., தலைமை மற்றும் உளவுத்துறை வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயங்கள்.

அது முழு வேகத்தில் செயல்பாட்டுக்கு வருமா அல்லது அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியே தொடருமா என்பது, அடுத்த சில வாரங்களில் வெளிச்சத்துக்கு வந்து விடும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us