தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'உதயநிதி பதவியை பறிப்பாரா முதல்வர்'

'உதயநிதி பதவியை பறிப்பாரா முதல்வர்'

'உதயநிதி பதவியை பறிப்பாரா முதல்வர்'


ADDED : அக் 28, 2024 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் : “அமைச்சர் பதவியில் இருந்து உதயநிதியை முதல்வர் ஸ்டாலின், 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்,” என, மாநில பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

கரூர் பா.ஜ., அலுவலகத்தில், நேற்று நடந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பார்வையிட வந்தவர் கூறியதாவது:

துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து, இருமுறை தவறாக பாடப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி, 'டெக்னிக்கல் பால்ட்' என கூறுகிறார். தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக கூறி, கவர்னரை திரும்ப பெற வலியுறுத்திய ஸ்டாலின், துணை முதல்வர் பதவியில் இருந்து உதயநிதியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுதும் கோவில்களில் கட்டணம் என்ற பெயரில், பக்தர்கள் சுரண்டப்படுகின்றனர். பா.ஜ., அமைப்பு தேர்தல் முடிந்த பின், தமிழக கோவில்களில் கட்டணம் கொடா இயக்கம் நடத்தப்படும். கரூரில், மொபைல் கடையில், ஹிந்தி எழுத்தை வி.சி., கட்சியினர் மை ஊற்றி அழித்துள்ளனர். இவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us