விவசாயிகளை வஞ்சித்துவிட்டு தி.மு.க., விழாவா: பா.ஜ.,
விவசாயிகளை வஞ்சித்துவிட்டு தி.மு.க., விழாவா: பா.ஜ.,
ADDED : செப் 03, 2025 04:55 AM
கோவை : தமிழக பா.ஜ., பொது செயலர் முருகானந்தம் அறிக்கை:
கரூரில் உள்ள மருதுார், திருச்சி உமையாள்புரம் இடையே காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பது, டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை.
தடுப்பணை கட்டினால், சுற்றியுள்ள கிராமங்களில் பாசனம் மற்றும் குடிநீர் வினியோகத்துக்கு என தண்ணீரை சேமிக்க முடியும். தடுப்பணை அமையும் இடத்தில் இருந்து, 6 முதல் 10 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
கடந்த 2021ல், அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'மருதுாருக்கும் உமையாள்புரத்துக்கும் இடையே, 750 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டப்படும்' என, சட்டசபையில் அறிவித்தார். ஆனால், நிதி பற்றாக்குறையால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக, நீர்வளத்துறை சிறப்பு திட்ட பிரிவு நிர்வாக பொறியாளர் கூறியுள்ளார்.
இது, அதிர்ச்சி அளிக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து பல லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலக்கும் சூழலில், சட்டசபையில் அறிவித்ததை செய்யாமல், நிதியில்லை என்று கூறுவது சரியல்ல.
இந்த லட்சணத்தில், 15ல் கரூரில் முப்பெரும் விழா நடத்த, தி.மு.க., திட்டமிட்டுள்ளது நியாயமா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.