தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘கிரானைட்’ வீரமணி வழக்கில் ஆதாரங்கள் அழிப்பா? ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் விசாரணை தொடக்கம்

‘கிரானைட்’ வீரமணி வழக்கில் ஆதாரங்கள் அழிப்பா? ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் விசாரணை தொடக்கம்

‘கிரானைட்’ வீரமணி வழக்கில் ஆதாரங்கள் அழிப்பா? ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் விசாரணை தொடக்கம்


UPDATED : நவ 13, 2026 07:57 PM

ADDED : நவ 13, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 07:57 PM ADDED : நவ 13, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘கிரானைட்’ வீரமணி மீதான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை மறைப்பதற்கும், அழிப்பதற்கும், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டாரா என்பது குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, ‘கிரானைட்’ வீரமணி, 85, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீரமணி உள்ளிட்டோர் மீதான ‘போக்சோ’ வழக்கு ஒன்றில், 720 பக்கத்தில் குற்றப்பத்திரிக்கையை புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்துள்ளனர். இதில், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் உட்பட, போலீஸ் அதிகாரிகள் ஏழு பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் மீது, பணியின்போது அலட்சியமாக செயல்பட்டது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

வீரமணி மீதான புகார் தரப்பட்டபோது, சென்னை போலீஸ் கமிஷனராக, ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் இருந்தார். இவருக்கு கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக, மற்றொரு ஐ.பி.எஸ்., அதிகாரி ராதிகா பணிபுரிந்தார்.

வீரமணி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட ‘போக்சோ’ வழக்கின் விசாரணை அதிகாரியாக, மத்திய குற்றப்பிரிவின் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனராக இருந்த யாஸ்மின் நியமிக்கப்பட்டார். இவர், ‘குற்றம் தொடர்பான போதிய ஆவணங்கள் கிடைக்கவில்லை. வீரமணி தான் குற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்களும் சிக்கவில்லை’ என, விசாரணையை கமுக்கமாக முடித்து, நீதிமன்றத்திற்கும் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

வீரமணி உள்ளிட்டோர் மீதான புகார்கள் வந்தபோதும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தபோதும், துணை கமிஷனர்களாக வனிதா மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் இருந்துள்ளனர். இவர்களின் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் ராஜலட்சுமி, மகேஷ்குமார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

அதனால், அருண் உட்பட இவர்கள் ஏழு பேர் மீதும், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வழக்கின் அடிப்படையில், கிரானைட் வீரமணி மீதான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அழிக்க, அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருண் உத்தரவிட்டாரா; அதன்படி மற்ற போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

அருணிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர் உட்பட போலீஸ் அதிகாரிகள் ஏழு பேரும் மீண்டும் ‘சம்மன்’ அனுப்பி விசாரிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எந்தெந்த பிரிவுகளில் வழக்கு?

* ‘போக்சோ’ சட்டம் பிரிவு, 21 – குழந்தைகளுகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து தகவல் தெரிந்தும் புகாரை பதிவு செய்ய மறுத்தல்

* பி.என்.எஸ்., 199 சி – குழந்தைகள் மற்றும் சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருத்தல்

* பி.என்.எஸ்., 235 – பொய்யான சாட்சிகள் என தெரிந்து இருந்தும், அவை உண்மை என நிரூபிக்க முயற்சி செய்தல்

* பி.என்.எஸ்., 238 – ஒரு குற்றம் நடந்துள்ளது என்று தெரிந்திருந்தும் அல்லது நம்புவதற்கு காரணம் இருந்தும், அந்தக் குற்றம் தொடர்பான ஆதாரங்களை வேண்டுமென்றே மறைப்பது அல்லது அழிப்பது. குற்றம்சாட்டப்பட்ட நபரை சட்டப்படி தண்டனையிலிருந்து காப்பாற்றும் நோக்கில் தவறான தகவல் அளித்தல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us