ADDED : டிச 28, 2025 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துணை முதல்வர் உதயநிதி, பெரும்பான்மை சமுதாயத்தின் எதிரி. 'ஹிந்து மத வெறுப்பு இல்லை' என சொல்லும் ஸ்டாலின், 'டெங்கு, மலேரியா கொசு மாதிரி சனாதனத்தை அழிப்பேன்' என கூறிய உதயநிதியை கைது செய்யாதது ஏன்?
முதல்வர் ஸ்டாலின், ஹிந்து விரோதி இல்லை என்றால், வரும் வைகுண்ட ஏகாதசி விழாவில், சொர்க்கவாசல் திறப்பின் போது, சென்னை பார்த்தசாரதி கோவிலுக்கு செல்ல வேண்டும். முதல்வரை சுற்றி இருப்பவர்கள் எல்லாம், ஹிந்து சமூகத்தை சிதைக்க நினைப்பவர்கள்.
சமூகத்தில் மிகப்பெரிய அழிவு சக்தி திருமாவளவன். ஹிந்து விரோத தீய சக்திகளை வரும் தேர்தலில், அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தாவிட்டால், ஹிந்து சமுதாயத்தினர், கவுரவமாக வாழ முடியாது. பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அறநிலையத்துறை கலைக்கப்படும்.
- எச்.ராஜா மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

