sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யாருக்கு ஓட்டளிப்பது என்பதில் அ.தி.மு.க., குழப்பம் கடைசி நேரத்திலாவது தலைமை வழிகாட்டுமா?

/

யாருக்கு ஓட்டளிப்பது என்பதில் அ.தி.மு.க., குழப்பம் கடைசி நேரத்திலாவது தலைமை வழிகாட்டுமா?

யாருக்கு ஓட்டளிப்பது என்பதில் அ.தி.மு.க., குழப்பம் கடைசி நேரத்திலாவது தலைமை வழிகாட்டுமா?

யாருக்கு ஓட்டளிப்பது என்பதில் அ.தி.மு.க., குழப்பம் கடைசி நேரத்திலாவது தலைமை வழிகாட்டுமா?


ADDED : ஜன 31, 2025 08:10 PM

Google News

ADDED : ஜன 31, 2025 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:இடைத்தேர்தலில் அ.தி.மு.க., ஓட்டை சிதறாமல் பெற, தி.மு.க.,வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் நேரடி சந்திப்பில் இறங்கிய நிலையில், அ.தி.மு.க., வலுவிழக்காமல் தடுக்க பழனிசாமி வழிகாட்ட கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., உட்பட பல கட்சிகள் புறக்கணித்ததுடன், தங்கள் கட்சியினர் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என வழிகாட்ட தவறியுள்ளனர். தேர்தலில், 46 பேர் போட்டியிட்டாலும், தி.மு.க., - நா.த.க., கட்சிகள் மட்டுமே வாக்காளர்களை ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக, தி.மு.க.,வுக்கு இணையான ஓட்டு வைத்துள்ள அ.தி.மு.க., ஓட்டை சிந்தாமல் பெற, தி.மு.க., அத்தனை பணிகளையும் செய்கிறது.

இதுபற்றி அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

அ.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதாக, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தது முதல், தி.மு.க., கூட்டணியினர், தங்கள் கூட்டணி ஓட்டுடன், அ.தி.மு.க., ஓட்டை பெற தனி கவனம் செலுத்துகின்றனர்.

பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் அ.தி.மு.க.,வின் பெயர், முகம் தெரிந்த நிர்வாகிகள் முதல், பகுதி செயலர்கள், மாவட்ட நிலை நிர்வாகிகள், முன்னாள் - இந்நாள் கவுன்சிலர்கள் என பட்டியல் பெற்று அவர்களது வீட்டுக்கே சென்று ஓட்டு சேகரிக்கின்றனர். கடந்த மூன்று நாட்களாக அமைச்சர் முத்துசாமி பிரசாரத்தில் பங்கேற்காமல், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளுடன் அ.தி.மு.க., நிர்வாகிகளை வீடுகளுக்கே சென்று சந்தித்து வருகிறார்.

'தி.மு.க.,வின் பணபலம், ஆட்சி - அதிகாரத்தை கடந்த இடைத்தேர்தலில் காண்பித்ததால், புறக்கணிப்பில் ஈடுபடுகிறோம்' என்று பழனிசாமி தெரிவித்தார். ஆனால், தி.மு.க.,வுக்கு இணையாக உள்ள, அ.தி.மு.க.,வினர் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், என நேரிடையாக வழிகாட்டவில்லை. நோட்டோவுக்கு ஓட்டு போடுங்கள் என முக்கிய நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். அது கட்சியினருக்கு பிடிக்கவில்லை.

இது சரியான வழிகாட்டுதல் இல்லை என கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர். சரியான வழிகாட்டுதல் இல்லை என்றால், அ.தி.மு.க.,வின் 95 சதவீத ஓட்டுக்கள் இம்முறை தி.மு.க.,வுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால், தேர்தலின் கடைசி கட்டத்திலாவது, யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை சரியான முறையில் பழனிசாமி கோடி காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us