ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்துக்கு முன் வணிகர்களிடம் கருத்து கேட்குமா அரசு?
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்துக்கு முன் வணிகர்களிடம் கருத்து கேட்குமா அரசு?
ADDED : ஆக 31, 2025 06:28 AM
சென்னை: 'ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன், தமிழக அரசு தங்களிடம் கருத்து கேட்க வேண்டும்' என, வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த சுதந்திர தினத்தன்று, நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்' என, அறிவித்தார்.
இது தொடர்பாக விவாதித்து முடிவு செய்ய டில்லியில் அடுத்த வாரம், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது.
இக்கூட்டத்தில், தமிழகம் சார்பில் கோரிக்கைகளை எடுத்துரைக்க, தமிழக அரசின் வணிக வரித்துறை சார்பில், வணிகர்கள் கூட்டம் நடத்தி கருத்து கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, வணிகர்களிடம் எழுந்துள்ளது.
இது குறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரி கள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், மாநில நிதி அமைச்சர்கள் மட்டுமே பேச முடியும். எனவே, இந்த கூட்டத்தில் தமிழக வணிகர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் வணிகர் சங்கங்களை அழைத்து, கருத் துகளை கேட்க வேண்டும்.
சில உணவு பொருட்களின் பெயரே, மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு தெரிவதில்லை. உதாரணமாக, மைதாவில் தயாரிக்கப்படும் ஹக்கா நுாடுல்ஸ், ஈரோடு மாவட்டத்தில் அதிகம் தயாரிக்கப்படுகிறது. இதற்கு, 12 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி.
எனவே, எந்தெந்த பொருட் களுக்கு வரி குறைக்கப்பட வேண்டும், வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக, தமிழக அரசு, வணிகர்களை அழைத்து கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.