மசூதியில் கூட்டம் சேருவதை அமைச்சர் விமர்சிப்பாரா?
மசூதியில் கூட்டம் சேருவதை அமைச்சர் விமர்சிப்பாரா?
ADDED : ஜூன் 09, 2025 03:45 AM

அ.தி.மு.க., - பா.ஜ., - த.மா.கா., போன்ற ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் பலமான கூட்டணி அமைந்துள்ளது. எங்களது நோக்கம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம். அதற்காக, ஒரே கருத்துடைய பழைய கட்சிகள், புதிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைந்து, ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமிட வேண்டும்.
கல்வியில் சாதனை படைத்த மாணவ - மாணவியரை, த.வெ.க., தலைவர் விஜய் பாராட்டியதை வாழ்த்தாமல், விமர்சனம் செய்து தவறான அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது. கோவில் விழாவில் கூட்டம் சேருவதை, ஐ.பி.எல்., வெற்றி கொண்டாட்டத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியுள்ளார்.
பொறுப்புள்ள அமைச்சரே இப்படி பேசுவது, அநாகரிகம். இதேபோன்று, மசூதி, சர்ச்சில் கூட்டம் சேருவதையும் ஒப்பிட்டு பேசுவாரா? தமிழகத்தில், ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசத் துவங்கிவிட்டது.
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை; அப்படித்தான், மகளிர் உரிமை திட்டத்தில், பயனாளிகளை இணைக்க மீண்டும் முகாம் நடத்துகின்றனர்.
- வாசன், தலைவர், த.மா.கா.,

