டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா?
டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா?
ADDED : பிப் 16, 2024 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில், அரசு டாக்டர்களின் நலனுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் உள்ளோம். இந்த ஆண்டாவது எம்.பி.பி.எஸ்., டாக்டர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு வழங்குவதற்கான அறிவிப்பை, பட்ஜெட்டில் அரசு வெளியிட வேண்டும். அதேபோல, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட, தமிழக அரசு டாக்டர்களுக்கு, 40,000 ரூபாய் குறைவாக ஊதியம் வழங்கப்படுகிறது.
--எஸ்.பெருமாள் பிள்ளை
அரசு டாக்டர்களின் சட்ட
போராட்டக் குழு தலைவர்.