ADDED : டிச 30, 2024 04:53 AM

சென்னை: மத்திய அமைச்சர் முருகன் அளித்த பேட்டி:
அண்ணா பல்கலையில் நடந்த சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க., அரசு துாக்கி எறியப்பட வேண்டும் என்பதற்காக, மிகப்பெரிய சபதத்தை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எடுத்துள்ளார்.
தி.மு.க., அரசு, குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது. முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
எப்.ஐ.ஆர்., வெளியானது, அவமானமான விஷயம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு, அவர் போராட்டம் நடத்துவாரா? நடத்தினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு முருகன் கூறினார்.