ADDED : ஜூலை 29, 2026 11:08 PM

சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி, இதுவரை இல்லாத அளவாக, நேற்று முன்தினம், 12.52 கோடி யூனிட்களாக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள் தற்போதைய நிலவரப்படி, 9,500 மெகா வாட் திறனில், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து உள்ளன.
இந்தாண்டு மே மாதம், காற்றாலை சீசன் தொடங்கியதில் இருந்து, காற்றாலைகளில் தினமும் சராசரியாக, 8 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கிறது.
இம்மாதம், 3ம் தேதி எப்போதும் இல்லாத வகையில், 12.43 கோடி யூனிட்கள் கிடைத்தன. இதற்கு முன், 2025 ஆக., 16ல், 12.38 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்ததே உச்ச அளவாக இருந்தது.
இந்நிலையில், காற்றாலை மின் நிலையங்களில் நேற்று முன்தினம், எப்போதும் இல்லாத வகையில், 12.52 கோடி யூனிட் கள் மின்சாரம் கிடைத்துள்ளன; இது, 27ம் தேதி, 12.36 கோடி யூனிட்களாக இருந்தது.
இதுவரை இல்லாத வகையில், இந்த சீசனில் தான் காற்றாலைகளில் இருந்து தினமும் அதிக மின்சாரம் கிடைக்கிறது.
தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், காற்றாலை மின்சாரத்தின் பங்கு முக்கியமானதாக மாறியுள்ளது.
