ADDED : மே 21, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவிரி வடக்கு வன உயிரின சரணாலயத்தில் இருந்து, அருகில் உள்ள கிராமங்களுக்கு யானைகள் கூட்டமாக நுழைவது அதிகரித்து வருகிறது. யானைகள் வருகையால், மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், யானைகள் வழக்கமாக வரும் பாதைகள், கண்டறியப்பட்டு, அங்கு இரும்பு கம்பி வேலி அமைக்க, வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு, 31 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. அடுத்த சில மாதங்களில், தடுப்பு கம்பி வேலி அமைக்கும் பணிகள் துவக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

