சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் வாபஸ்: அறிவித்தது வானிலை மையம்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் வாபஸ்: அறிவித்தது வானிலை மையம்
UPDATED : அக் 16, 2024 10:33 PM
ADDED : அக் 16, 2024 10:28 PM

சென்னை: சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலை சென்னைக்கு அருகே நெல்லூர் - புதுச்சேரி இடையே கரையை கடக்க உள்ளது. அப்போது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் எனக்கூறிய வானிலை மையம் அதற்கான ரெட் அலர்ட் விடுத்து இருந்தது.
இந்நிலையில், இந்த 4 மாவட்டங்களிலும் விடுக்கப்பட்ட அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை
இன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
அதேபோன்று, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.