ADDED : ஜூன் 05, 2025 02:47 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற அதிகாரியிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 8 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் 2016 ல்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல மேலாளராக பணியாற்றியவர் தாசன் 70. ஓய்வுக்கு பிறகு கே.டி.சி.நகர் பகுதியில் வசிக்கிறார். மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 2016 ல் திருநெல்வேலியில் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றிய போது தியாகராஜநகரை சேர்ந்த பெனிட்டா ரெஜினால்ட் 30, என்ற பெண் பழகினார்.
தமக்கு மத்திய அரசில் பெரிய அதிகாரிகளை தெரியும் எனவும் தாசன் மகளுக்கு அரசு மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி இரு தவணைகளில் ரூ.8 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. 2020 ல் போலீசில் தாசன் புகார் செய்தார். பெனிட்டா தலைமறைவானார். 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெனிட்டா நேற்று கைது செய்யப்பட்டார்.
சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.