ADDED : ஆக 09, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் பொன்னமங்கலத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் பாண்டிச்செல்வி 24. திருமங்கலம் அண்ணா நகரில் வசித்தனர். பாண்டிச்செல்வி திருமங்கலம் அரசு கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
நேற்று மதியம் அவர் சிக்கன் ரைஸ் கேட்கவே அவரது சகோதரர் உணவகத்தில் வாங்கி கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட பாண்டிச்செல்வி சிறிது நேரத்தில் ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்து மயங்கினார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் பலியானார். சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் பலியானாரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடக்கிறது.