உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 21, 2026 10:40 PM
ADDED : அக் 21, 2026 08:10 PM

அ நிறம் | அளவு
அணைக்கட்டு: பட்டாசு கிடங்கு வெடி விபத்தில், காயத்ரி, 41, உயிரிழந்தார்.
வேலுார் மாவட்டம், சின்ன அணைக்கட்டு பகுதியில், ஹரி பிரசாந்த், 47, என்பவருக்கு சொந்தமான 'ஸ்ரீ சப்தகிரி' பட்டாசு தயாரிப்பு கிடங்கு உள்ளது. இங்கு, இன்று காலை, 10:30 மணியளவில், எட்டு பேர், வெடிமருந்துகளை தரையில் கொட்டி, பட்டாசுகள் தயாரித்தனர்.
தரையில் வெப்பம் அதிகரித்து, திடீரென தீ பற்றி, வெடி மருந்துகள் வெடித்தன.
இதில், காயத்ரி, 41, என்பவர், தீயில் கருகி உயிரிழந்தார். சங்கீதா, 32, என்பவர், 90 சதவீத தீ காயங்களுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அணைக்கட்டு போலீசார், ஹரிபிரசாத் மீது, வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.
