ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; திண்டுக்கல்லில் வாலிபர் கைது
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; திண்டுக்கல்லில் வாலிபர் கைது
ADDED : பிப் 10, 2025 05:01 PM

திண்டுக்கல்:துாத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த
வாலிபரை திண்டுக்கல்லில் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயதான இளம்பெண். இவர் தனியார்
அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தங்கியிருந்து படிக்கிறார். நேற்று முன் தினம் இளம்பெண்ணின் தந்தைக்கு உடல்நிலை
சரியில்லை என அவரது குடும்பத்தினர் ஈரோட்டிற்கு அழைத்தனர்.
அப்பெண், துாத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி பயணித்தார். ரயில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் நின்றது.
அங்கிருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த பெயிண்ட் கடையில் லோடு மேனாக வேலை செய்யும்தொழிலாளி சதீஷ்குமார், ஈரோடு சென்று அங்கிருந்து கோவை செல்வதற்காக இந்த ரயிலில் ஏறினார். அதிக மது போதையில் இருந்த அவர் இளம்பெண்ணின் அருகே அமர்ந்திருந்தார்.
கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே வரும் போது சதீஷ்குமார்,
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த அப்பெண், அருகிலிருந்தவர்களின் உதவியோடு ரயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த உதவி எண் 139 எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்தார். அவர்கள் திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்க இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையிலான நேற்று அதிகாலை 3:30 மணிக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வு செய்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சதீஷ்குமாரை, கைதுசெய்து விசாரக்கின்றனர்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன் ரயிலில் ஆந்திரா சென்ற கர்ப்பிணிக்கு வேலுார் அருகே சிலர் பாலியல்தொல்லை கொடுத்த விவகாரம் இன்னும் அடங்காத நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இளம்பெண்ணுக்கு ரயிலில் பாலியல்
தொல்லை கொடுத்து வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது ரயிலில் பயணிக்கும் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.