ADDED : ஜூன் 01, 2025 05:59 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தை சேர்ந்த முகமதுஷாம், 31, உயர்கல்விக்காக சென்னையில் தங்கியுள்ளார். சென்னை, அமைந்தகரையை சேர்ந்த அபுதாஹிர் மகள் ரிஸ்வானா, 21, முகமதுஷாமுக்கு அறிமுகமாகியுள்ளார்.
இருவரும் காதலித்துள்ளனர். ரிஸ்வானா நடவடிக்கைகள் சரியில்லாததால், முகமது ஷாம் காதலை துண்டித்துக் கொண்டார். காதலித்த போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை காட்டி, ரிஸ்வானா, முகமதுஷாமை மிரட்டியுள்ளார்.
ரிஸ்வானா, அவரது தந்தை அபுதாஹிர், தாய் அபிதா மற்றும் உறவினர் இப்ராஹிம் ஆகிய நான்கு பேரும், முகமதுஷாமிடம், அவரது போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரில், பட்டுக்கோட்டை மகளிர் போலீசார், ரிஸ்வானா, அபுதாஹிர், அபிதா, இப்ராஹிம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.