ADDED : ஜூலை 12, 2025 03:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில், மின்கட்டணம் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழிலை மேம்படுத்த தமிழக அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை. தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்கும் நிதி முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, அரசு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்பதாக கூறுகின்றனர். ஆனால், அது பாதி பெண்களுக்கு கிடைப்பதில்லை.
- ஷோபா கரந்த்லாஜே,
மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

