ADDED : ஜன 30, 2026 01:49 AM

'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' என்பது ஏட்டளவில்தான் இருக்கிறது. பீஹார் கூலி தொழிலாளி, அவரது மனைவி, குழந்தை உள்ளிட்டோர் சென்னையில் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவமே, இதற்கு சான்று.
சமீபத்தில், தஞ்சையில் நடந்த தி.மு.க., மகளிர் அணி மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'பெண்களுக்கு பாதுகாப்பான சூழல், தமிழகத்தில் உருவாகி உள்ளது. அதனால் தான், தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்' என பெருமிதத்துடன் கூறினார்.
அப்படி சொன்ன மறுநாளே, சென்னையில் கொடூர கொலைகள் அரங்கேறி, தமிழகத்தையே உலுக்கி உள்ளன. தமிழகத்துக்கு பிழைக்க வந்த வெளி மாநிலத்தவரையும் விட்டு வைக்காத அளவுக்கு, ஒரு குடும்பத்தையை மது போதை நிர்மூலமாக்கி உள்ளது. தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ, மதுவை அறவே ஒழிக்க வேண்டும்.
- ராமதாஸ் நிறுவனர், பா.ம.க.,

