இரண்டு மாதமாக ரூ.1,000 வரவில்லை: மகளிர் திடீர் புகார்
இரண்டு மாதமாக ரூ.1,000 வரவில்லை: மகளிர் திடீர் புகார்
ADDED : ஜூலை 15, 2025 09:33 PM
சென்னை:மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளில் சிலர், கடந்த இரு மாதங்களாக, அந்த தொகை கிடைக்கவில்லை என, புகார் எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில், 1.15 கோடி மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகையை, 2023 செப்., முதல், தமிழக அரசு வழங்குகிறது. இந்த தொகை, மாதந்தோறும் பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என, சிலர் புகார் எழுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவர், சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையரகம் மற்றும் உணவுத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'கடந்த இரு மாதங்களாக, 1,000 ரூபாய் வரவில்லை. இதற்கான வங்கி ஆதாரங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தோம். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்' என்றனர்.