மகளிர் இலவச பஸ் எண்ணிக்கை அதிகரிக்கிறது; தமிழக அரசு முடிவு
மகளிர் இலவச பஸ் எண்ணிக்கை அதிகரிக்கிறது; தமிழக அரசு முடிவு
ADDED : பிப் 17, 2025 04:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
தலைநகர் சென்னையில் நாள்தோறும் 3232 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 1500 பஸ்கள் மகளிர் கட்டணமில்லா பஸ்களாக இயங்குகின்றன.
இந்த வகை பஸ்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதோடு,மகளிர் எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளதால் கூடுதலாக 174 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பயணிகள் எண்ணிக்கை, வருவாய் குறைவாக இருக்கும் வழித்தடங்களில் உள்ள பஸ்கள், கட்டணமில்லா பஸ்களாக மாற்றப்படுகின்றன. இந்த பஸ்கள், கூட்ட நெரிசல் மிக்க வழித் தடங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

