உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 07, 2026 01:51 AM
அ நிறம் | அளவு
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, கோ -ஆப் டெக்ஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சர்வதேச மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. எனவே, பெண்களை போற்றும் வகையில், கோ - ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில், இன்றும் நாளையும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே, இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. பருத்தி, பட்டு சேலை உள்ளிட்ட பெண்களின் ஆடைகளுக்கு மொத்த விலையில் இருந்து, 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
