கள்ளர் பள்ளிகளுக்கு தேர்வான 18 ஆசிரியர்களுக்கு பணி ஆணை இழுபறி
கள்ளர் பள்ளிகளுக்கு தேர்வான 18 ஆசிரியர்களுக்கு பணி ஆணை இழுபறி
ADDED : ஆக 15, 2025 12:38 AM
தேனி:ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளை தேர்வு செய்த 18 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காமல் ஒரு மாதத்திற்கு மேல் இழுபறியாக உள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் மட்டும் கள்ளர் சீரமைப்புத்துறையினர் கீழ் பள்ளிகள், விடுதிகள் செயல்படுகின்றன. இத்துறையின் கீழ் 230 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. சில பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக செயல்படுகின்றன.
கடந்தாண்டு நடந்த இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வில் 2700 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 2430 பேர் அரசுப்பள்ளிகளையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை 161 பேர், சென்னை மாநகராட்சி பள்ளிகளை 21 பேர், மாற்றுத்திறனாளி மாணவர் பள்ளிகளை 29 பேர், கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளை 18 பேர் தேர்வு செய்தனர்.
கள்ளர் சீரமைப்புத்துறையை தேர்வு செய்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவில்லை. மற்ற துறைகளை தேர்வு செய்தவர்கள் ஒரு மாதத்திற்கு முன் பணி நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்தனர். இவர்களுக்கு அமைச்சர் மூலம் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பதற்காகவே கள்ளர் சீரமைப்பு துறை அதிகாரிகள் தாமதம் செய்து வருவதாக தேர்வானவர்கள் குற்றம் சாட்டினர்.